சேலம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில், ஆய்வு நடத்தினார். அப்போது, ஸ்கேன் மையம், எக்ஸ்ரே மையம் ஆகிய பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை விவரத்தை கேட்டறிந்தார். பின்னர், அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரித்தார்.

தொடர்ந்து, மகப்பேறு பிரிவுக்கு சென்ற முதலமைச்சர், பிறந்த குழந்தைகளை பார்வையிட்டு, தாய்மார்களுக்கு, அம்மா பரிசுப் பெட்டகத்தை வழங்கினார். மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளிடம் கனிவுடன் நடந்துகொள்ள வெண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், அன்புடன் பேச வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

சேலம் அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சேலம் மாநகர் மாவட்ட செயலாளருமான செல்வராஜின் சகோதரர் ராஜேந்திரனின் மகன் ஸ்ரீனிவாசன் திருமண திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்கள் ஸ்ரீனிவாசன், சுஷ்மிதா ஆகியோரை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், சக்திவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version