ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அரசே ஏன் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அதன்படி, முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெறுகிறது.
கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் கருத்து கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.