கோவை மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பலவேறு திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

கோவையில், பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் உட்பட, 238 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 166 கோடி ரூபாய் மதிப்பிலான பில்லூர் 3-ம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். வருவாய்த்துறை சார்பில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் ஆகியவற்றை, முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு, 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம், கோவை செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கோவையின் உக்கடம் பகுதியில், பேரூர் சாலையை ஒட்டியுள்ள பெரிய குளத்தில், 39 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஒரு பகுதியினை, மக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல், 23 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட வாலங்குளம் மேம்பாலத்தின் ஒரு பகுதியும், மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

Exit mobile version