சேலத்தில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!

தமிழகத்திற்கான காவிரி நீரை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, சேலம் சென்றார். அப்போது, ரூ.76 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சேலம் கந்தம்பட்டி-இளம்பிள்ளை சாலை சந்திப்பில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தையும் அவர் திறந்துவைத்தார். தொடர்ந்து, 8 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கான காவிரி நீரை பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை ஏரிகளில் நிரப்புவதால் டெல்டா மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.

Exit mobile version