மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

2019 மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரதமர் மோடிக்கு இந்திய மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்திருப்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கும் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

அதேபோல் ஒடிசா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்கவுள்ள நவீன் பட்நாயக்கிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று 5-வது முறையாக நவீன் பட்நாயக் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Exit mobile version