அருண் ஜேட்லியின் மறைவு, அவரது குடும்பம் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு மட்டும் இன்றி, இந்திய நாட்டிற்கும் பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாஜக கட்சியின் முக்கிய தலைவராகளில் ஒருவராகவும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் அருண் ஜேட்லி என்று குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு தமக்கு மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் தருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லி, நிதித் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் மக்களின் நன்மை மற்றும் நட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்கை மறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழக கூடிய பண்பாளரான அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.