கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார் பிரதமர்!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை 10 மணியளவில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அதில் கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அனைவரும் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் தங்களை தனிமைபடுத்தி கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநில அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அரசுத் துறை செயலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தலை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

Exit mobile version