சர்தார் வல்லபாய் சிலை திறப்பு விழா -முதலமைச்சர் பழனிசாமிக்கு நேரில் அழைப்பு

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை, வரும் 31 ஆம் தேதி குஜராத்தில் திறக்கப்பட உள்ளது. சர்தார் சரோவர் அணைப் பகுதியில் 182 அடி உயரத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 ஆயிரத்து 389 கோடி ரூபாய் செலவில் பட்டேல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 31ம் தேதி நடைபெறும் விழாவில் இந்தச் சிலையை, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

விழாவில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை வந்த குஜராத் மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினர்.

Exit mobile version