திருமழிசையில் காய்கறி அங்காடி அமைப்பதற்கான பணிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் நேரில் பார்வையிட்டனர்.

சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த காய்கறி அங்காடி தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து, திருமழிசை பகுதியில் காய்கறி அங்காடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்காடி அமையும் பகுதியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். காய்கறி அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை ஆய்வு செய்த இருவரும், வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து காய்கறி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் இருவரும் நேரில் ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் ஆய்வில் கலந்து கொண்டனர். கடைகள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், திருமழிசை காய்கறி அங்காடி நாளை திறக்கப்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version