ரூ.335.5 கோடி மதிப்பிலான பாசன மேலாண்மை பணிகளை முதலமைச்சர் துவக்கிவைத்தார்!

335,50,00,000 ரூபாய் மதிப்பீட்டில், கரூர் மாவட்டம் காவிரி வடிநிலத்திலுள்ள கட்டளை உயர்மட்ட கால்வாய்  பாசன மேலாண்மை பணிக்கு காணொலி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் கரூர் மாவட்டத்தில் 20,185 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் 3,589 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதுமட்டுமல்லாமல், கடலூர் மாவட்டம் கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே 15,77,00,000  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் விருத்தாசலம் வட்டம் பரவளூர் கிராமத்தில் மணிமுக்தா நதியின் குறுக்கே 10,05,00,000 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், கோவை மாவட்டத்தில் கோரையாறு, குமிட்டிபதி, பெரியபள்ளத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் உள்ளிட்ட 33,50,00,000 ரூபாய் மதிப்பீட்டில் நிறைவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதோடு, காஞ்சிபுரம் மாவட்டம்  ஒரத்தூரில் கிளை ஆற்றின் குறுக்கே புதிய நீர் தேக்கம் அமைத்தல், சிட்லபாக்கம் ஏரியை புனரமைக்கும் பணி உள்ளிட்ட 209,95,00,000 ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Exit mobile version