தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று டெல்லி செல்கின்றனர்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அமைச்சரவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 30ம் தேதி 2வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் உடன் செல்லவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.