மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் ஆலோசனை!

நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன், காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு உதவி செய்து வரும் ஜல்சக்தி அமைச்சகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். காவிரி நீரானது தமிழ்நாட்டுக்கு விவசாய பணிகளுக்கு மட்டுமின்றி, குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருவதாக குறிப்பிட்டார். நமாமி கங்கை திட்டத்தை போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version