ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், முடுக்கூரணி கிராமத்தில் ராணுவ வீரரின் மனைவி மற்றும் தாயைக் கொலை செய்த மர்ம நபர்களைப் பிடிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , ராணுவ வீரர் ஸ்டீபன் மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

Exit mobile version