முதல்வரின் தேர்தல் பிரச்சாரம் சுற்றுப்பயண விவரம்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று இரண்டாம் நாள் தேர்தல் சுற்றுப் பயணத்தை துவக்குகிறார். அவரின் பயண விவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். மார்ச் 26ம் தேதி காலை 8 மணிக்கு, சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதிக்குட்பட்ட பார்த்தசாரதி கோயிலில் இருந்து, பிரசார பயணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்குகிறார்.

அதன் பின்னர், காலை 8.30 மணிக்கு சிந்தாதிரிபேட்டை மார்கெட் அருகில் பிரசாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர், காலை 9.15க்கு எழும்பூர் தொகுதிக்குட்பட்ட சூளையில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, காலை 9.45 மணிக்கு, அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட டி.பி.சத்திரம், சி.எம்.டி.ஏ காலனியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

காலை 10.30 முதல் மதியம் வரை, கோயம்பேடு ரவுண்டான வழியாக வி.ஆர். மஹால், 13வது மெயின் ரோடு ரயில்வே கிராசிங், ஐ.சி.எப். பேருந்து நிலையம், நியூ ஆவடி ரோடு, காந்திநகர் வெள்ளாள தெரு செல்லியம்மன் கோவில் மற்றும் நாடார் பள்ளி, அயனாவரம் டிப்போ போன்ற பகுதிகளில் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.

பின்னர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு கோட்டூர்புரம் சாலை பொன்னியம்மன் கோயில் மார்கெட் செல்லும் முதலமைச்சர், அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து, 4.30 மணிக்கு ரேஸ் கோர்ஸ் சாலையில் வாக்கு சேகரிக்கும் அவர், மாலை 5 மணி முதல் 6.45 மணி வரை, மத்தியகைலாஷ் வழியாக திருவான்மியூர் மேற்கு அவன்யு, லஸ்கார்னர், எஸ்.ஐ.இ.டி. கல்லூரி, அரங்கநாதர் சுரங்க பாதை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

மாலை 6.45 மணிக்கு கரும்பாடி அம்மன் கோயில் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு வாக்கு சேகரிப்பை முடித்துக்கொண்டு, இரவு 7.15 மணிக்கு விருகம்பாக்கம் ஏரிக்கரை பகுதியிலும் இரவு 8 மணிக்கு தசரதபுரம் சாலை சந்திப்பிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அங்கிருந்து, இரவு 8.30 மணிக்கு வந்தடையும் முதலமைச்சர், டி.நகர், கோடம்பாக்கம், ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து, தேர்தல் பரப்புரையை முடிக்கிறார்.

Exit mobile version