இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் பக்ரீத் வாழ்த்து

உலகில் அன்பும், அமைதியும், மனிதநேயமும் தழைத்தோங்கிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தியாகத்தை போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். இந்த திருநாளில், திருக்குரானின் போதனையை மக்கள் மனதில் நிறுத்தி, உலகில் அன்பும், அமைதியும், மனித நேயமும் தழைத்திட ஒற்றுமையாக வாழவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version