ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை ஒட்டி, அவரது சிறப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நினைவு கூர்ந்துள்ளனர்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, வரி செலுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும், தூக்கு கயிற்றை முத்தமிட்டு, வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் அவரை வணங்கி நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல், துணை முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரமுழக்கமிட்டு, உயிரை துச்சமென தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார்.