முதல்வர்,துணை முதல்வர் பங்கேற்ற தே.ஜ.கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான விருந்து டெல்லியில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சுதீஷ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Exit mobile version