தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார்.
பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக வறட்சி நிலவி வருகிறது. வறட்சியை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கல் குவாரிகளிலிருந்தும், விவசாயக் கிணறுகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் நீர் கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பது குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.