கனமழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். குறிப்பாக கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஏராளமானோர் உடமைகளையும் வீடுகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று ஆய்வு நடத்திய நிலையில் இன்றைய கூட்டத்தில் ஆய்வறிக்கையை சமர்பித்தார். அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Exit mobile version