மறுவாக்குப்பதிவு, இடைத்தேர்தல், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை 6வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 23ம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள அஷுதோஷ் சுக்லாவிடம் மேற்கொண்ட ஆலோசனை குறித்தும் சுனில் அரோரா ஆலோசனை மேற்கொண்டார். வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் நடக்கவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் சுனில் அரோரா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.