சமூக வலைதள நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர், வாட்ஸ்அப், கூகுல், பேஸ்புக் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவன நிர்வாகிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் கட்டுப்பாடுகள் மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்து நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். பிரச்சாரங்களை கண்காணித்து அது தொடர்பான தகவல்களை தருவது, சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை உடனடியாக நீக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சமூக வலை தளங்களில் செயல்படும் அரசியல் கட்சிகள் தொடர்பான தகவல்களை வழங்குவது குறித்தும், தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பிறகும் சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்பவர்களின் தகவல்களை பெறுவது குறித்தும் நாளை ஆலோசிக்கப்பட உள்ளது.