சிதம்பரம் நடராஜர் கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம் நடராஜர் கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளைக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஞானப்பிரகாசம் குளம் என்கிற பெயரிலான தெப்பக் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தைச் சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் கட்டி அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்துக் குடியிருந்து வந்தனர். இதனால் சில ஆண்டுகளாகத் தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தெப்பக்குளத்தைத் தூர்வார வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்துக் கடலூர் மாவட்ட நிர்வாகம், சிதம்பரம் நகராட்சி ஆகியவற்றின் அலுவலர்கள் காவல்துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version