சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டிய நிகழ்ச்சி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நடனமாடி உலக சாதனை படைத்தனர். உலக பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த 7 ஆயிரத்து 190 நடன கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.

பிரபல நாட்டிய இசைக் கலைஞர் பத்மா சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நாட்டிய நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நடனமாடிய இந்நிகழ்வு கின்னஸ் சாதனையாக அங்கீகரிப்பட்டது. இதற்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ரிஷிநாத், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் வழங்கினார்.

Exit mobile version