சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் தீவிர பிரசாரம்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரசேகர், வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களிலும் அனைவரையும் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். சிதம்பரம் பகுதியில் கீரப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துக்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அவருடன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். அவருக்கு பல இடங்களிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version