மத்திய ரிசர்வ் வங்கியின் இருப்பில் உள்ள ஒன்பது லட்சம் கோடி ரூபாயை அபகரிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதன் இருப்பில் உள்ள 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அபகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உலகத்தில் எங்குமே, மத்திய வங்கி ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய ரிசர்வ் வங்கியின் இருப்பு அளவை குறைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. 9 லட்சம் கோடியிலிருந்து, 3 லட்சம் கோடியை மத்திய அரசு பெறுவதற்கும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து இயக்குநர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில் ப. சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.