கொரோனா பீதி எதிரொலி – விருதாச்சலத்தில் இரண்டரை கிலோ கோழிக்கறி 100ரூபாய்க்கு விற்பனை!

கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் பீதியால் கோழிக்கறி விற்பனை பாதிக்கப்படுள்ள நிலையில், ஒலிபெருக்கி வைத்து கூவிக்கூவி கோழிக்கறியை விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் சில வாரங்களுக்கு முன்பு வதந்தி பரவியது. இதன் காரணமாக கறிக்கோழியின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இரண்டரை கிலோ கோழிக்கறி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவர கோழிக்கடை ஒன்றில் ஒலிபெருக்கி வைத்து கூவிக்கூவி கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.

 

Exit mobile version