குழந்தைகள் ஸ்மார்ட்போன் அடிமையாவதை தடுக்க புதுமையான முடிவை இந்தோனேசியா அரசு எடுத்துள்ளது.
இன்றைய சமூகத்தில் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கின்றது. கிட்டதட்ட வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என எல்லோரும் அதற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிலிருந்து பாதுகாக்க படாதபாடு படுகிறார்கள்.
இந்நிலையில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பண்டங் நகரில் ஸ்மார்ட் ஃபோன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை தடுக்க நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அரசு சார்பில் 10 மழலையர் பள்ளிகள் மற்றும் 2 உயர்நிலை பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கோழி குஞ்சுகள் கொடுக்கப்பட்டு அதனை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசின் இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.