கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக ''சிக்கன் 65''

கோழி இறைச்சியில் இருந்து கொரோனா பரவுவதாக வதந்தி விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக சிக்கன் 65. கோழி இறைச்சியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவி வரும் நிலையில், லூதியானாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் 65 வழங்கப்பட்டது. கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணியும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து சிக்கனை ருசித்து சாப்பிட்டனர்.

Exit mobile version