`செத்து தொல’ – சித்ராவை கடுமையாக திட்டிய ஹேம்நாத்!

’செத்து போ’ என கணவர் ஹேம்நாத் திட்டியதால் சித்ரா மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

திருமண நிச்சயத்திற்கு பின் நடிகை சித்ராவுக்கும், அவரது கணவர் ஹேம்நாத்துக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சித்ரா, தொடர்களில் நடிப்பது குறித்தும், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்தும், விரும்பாத ஹேம்நாத் இதுகுறித்து சண்டையிட்டுள்ளார். வெகுநாளாக அவர்களுக்குள் இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்துக்கொண்ட அன்றைய தினமும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், தகராறு முற்றி,’செத்து போ’ என சித்ராவை திட்டிவிட்டு அறையில் இருந்து ஹேம்நாத் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இருவருக்குமான தகராறு குறித்து காவல்துறை விசாரணையில் ஹேம்நாத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version