சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக சிகிச்சை பெறுபவர்கள் குறித்த விவரத்தை தற்போது பார்க்கலாம்…
அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில், 3 ஆயிரத்து 166 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 ஆயிரத்து 115 பேர் குணமடைந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 322 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், 3 ஆயிரத்து 776 பேர் குணமடைந்துள்ளதாகவும், ராயபுரத்தில் 2 ஆயிரத்து 309 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், 5 ஆயிரத்து 639 பேர் குணமடைந்துள்ளதாகவும், தேனாம்பேட்டையில் 2 ஆயிரத்து 51 பேர் சிகிச்சை பெறுவதாகவும், 4 ஆயிரத்து 362 பேர் குணமடைந்துள்ளதாகவும், தண்டையார் பேட்டையில் ஆயிரத்து 838 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், 4 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருவிக நகரில் ஆயிரத்து 771 பேரும், அடையாறில் ஆயிரத்து 594 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 175 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.