சென்னையில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்து வருவதால், நடுத்தர மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக, தீபாவளி முதல் காய்கறிகளின் விலை, ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. மேலும், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், இன்னும் விலை அதிகரித்து, 100 ரூபாயைத் தாண்டி விற்பனையானது.
மொத்த விலைக் கடைகளில் 130 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 150 ரூபாயைத் தாண்டியதால், இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்தனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து லாரிகளில் தக்காளி வரவழைக்கப்பட்டதால் விலை சிறிது குறைந்தது.
ஆனால், ஆயிரத்து 200 டன் தக்காளி வரவேண்டிய நிலையில், 40 முதல் 45 வண்டிகளில் 650 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதால், மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர்.
மழை காரணமாக வெண்டைக்காய், பகாற்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.