கொட்டித் தீர்த்த கனமழையால் தலைநகர் சென்னை மீண்டும் வெள்ளக்காடானது. குறிப்பாக தியாகராய நகர் பகுதி தீவுபோல் காட்சியளிக்கும் நிலையில், திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இடைவிடாத மழையால் சென்னையில் திரும்பும் திசையெங்கும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. சென்னையின் முக்கிய இடமான தியாகராய நகரைச் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து தனித் தீவாக மாறியுள்ளது.
சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், அத்தியாவசியத் தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், உணவின்றி தவித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமலும் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாக தியாகராய நகர் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.