ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 12 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று மோதுகிறது.

8 அணிகள் பங்கேற்கும் 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், இன்று தொடங்குகிறது. இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி கடந்த சீசனில் இருந்த பெரும்பாலனா வீரர்களை தக்க வைத்துள்ளது. இதுவரை சென்னை பெங்களூர் மோதிய 22 போட்டிகளில் சென்னை 14 முறையும், பெங்களூரு 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லாமல் போனது. புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களை நினைவு கூறும் வகையில் தொடக்க விழாவை ஐபிஎல் ரத்து செய்துள்ள நிலையில், தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை சென்னை அணி பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version