மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்

தொடர்ந்து வெற்றி வாகை சூடிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியுடன் இன்று மோதுகிறது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், சென்னையின் வெற்றி தொடருமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 12 வது ஐபிஎல் லீக் போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றிபெற்று உற்சாகத்துடன் உள்ள சென்னை அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் துவண்டுள்ளது. இன்றைய போட்டி மூலம், சொந்த மைதானத்தில் மும்பை அணி வெற்றி பெறுமா அல்லது சென்னை அணி ஆதிக்கம் செலுத்துமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Exit mobile version