சென்னை சில்க்ஸ் கடையில் தீ விபத்து

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, மூன்று தீயணைக்கும் வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version