பல்வேறு சம்பவங்களில் பலரது வாழ்க்கையை மாற்றி, சாட்சியமாக இருக்கும் சிசிடிவி கேமரா பணி மகத்தானது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை எழும்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட ஆயிரத்து 556 சிசிடிவி கேமராக்களை ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகம் பாதுகாப்பு நிறைந்த மாநிலம் என்றார்.
சென்னையை குற்றம் இல்லாத நகரமாக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், காவல் பணி சிறப்பான பணி என்றும், அதற்கு பொதுமக்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.