சென்னை தலைமைச் செயலகம் 2 நாட்கள் மூடல்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக வாரம் தோறும் 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தலைமை செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கமான நடவடிக்கையாக, நாளை மற்றும் நாளை மறுநாள், தலைமை செயலகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களும், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலகம் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.

Exit mobile version