நீ வரும்போது நான் நனைவேனா… சென்னையில் மழை..அதுவும் ஆலங்கட்டி மழை!

சென்னையில் இன்று அதிகாலை மூன்று மணியிலிருந்து மழை பெய்து வருகிறது. மேலும் வெயிலும் மழையும் இரண்டும் மாறிமாறி வருகிறது. அனைவரும் பணிக்கு செல்லும் நேரத்தில் மழை பெய்ததால் சிலர் கொஞ்சம் தாமதமாக பணிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் வெயிலுக்கேற்ற மழை பெய்திருப்பதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் முக்கியமாக சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதனை புகைப்படம் எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டனர். இன்றைய ட்ரெண்டில் ஆலங்கட்டி மழைதான் முதலிடத்தில் சமூக வலைதளங்களில் உள்ளது.

Exit mobile version