கல்பனா சாவ்லா பிறந்ததினம் இன்று..விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி!

கல்பனா சாவ்லா 1962 ஆம் ஆண்டு மார்ச் 17ல் அரியாணா மாநிலத்தில் உள்ள கர்னல் என்கிற இடத்தில் பிறந்தார். இவர் அடிப்படையில் ஒரு பஞ்சாபியர்.  கல்பனா சாவ்லா 1995 ஆம் ஆண்டில் முதன் முதலில் நாசாவில் சேர்ந்தார். அங்கு அவர் விண்வெளி செல்வதற்கான பயிற்சிக்குழுவில் பயிற்சி மேற்கொண்டார். 1996 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு செல்பவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி கலமான எஸ்டிஎஸ்-87 விண்கலத்தில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19ல் விண்ணிற்கு சென்றார். கல்பனா சாவ்லாவின் பெரிய சாதனையாக சொல்லப்படுவது எதுவென்றால் சென்ற முதல் விண்வெளிப் பயணத்திலேயே 360 மணி நேரங்கள் விண்வெளியில் இருந்துள்ளார். அதனைவிட கூடுதல் சிறப்பாக இருப்பது அவர் 252 முறை பூமியைச் சுற்றி வந்து கிட்டத்தட்ட 10.67 மில்லியன் கிலோ மீட்டர்கள் தூரம் பயணம் செய்திருக்கிறார்.

Exit mobile version