உலக தூக்க தினம் இன்று..தூக்கத்தை இழந்தவர்களின் பட்டியலில் இந்தியர்களுக்கே முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17 ஆம் தேதி உலக தூக்க தினம் அல்லது உறக்க தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், நவீன உலகத்தில் மனிதர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து சமூக வலைதளங்களில் அதிக அளவு புழங்கும் பண்பு காணப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு உளரீதியாகவும் உடல் ரீதியாவும் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறிவருகிறார்கள். ஒரு மனிதனுக்கு உறக்கம் என்பது அவனது உடலுக்கான அடிப்படைத் தேவை. ஒரு நாளில் குறைந்தபட்சமாக ஆறு மணி நேரமும் அதிகபட்சமாக எட்டு மணி நேரமும் உறக்கம் என்பது அவசியம். ஆனால் பெரும்பாலானவர்கள் ஐந்து மணி நேரங்கள் தான் உறங்குகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லப்படுகிறது.

இதில் அதிர்ச்சியான தகவல் என்னெவென்றால் இந்தியர்கள் தான் உலகிலேயே தூக்கத்தை இழந்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்கள். அதற்கான காரணமாக ஆய்வாளர்கள் சொல்வது என்னவென்றால் சமூக வலைதளங்களின் மீதான கவனகுவிப்பும், நவீன வாழ்வியல் முறையும் இந்தியர்களை மிகவும் மாற்றியுள்ளது. இதனால் சரிவர தூங்காமல் உள்ளார்கள். இரவு முடிந்தவரை பதினொறு மணியளவில் உறங்கிட வேண்டும். அந்த நேரம்தான் உடலின் நாளமில்லா சுரப்பிகள் செயல்படும் நேரம். பதினொறு மணியிலிருந்து அதிகாலை மூன்று மணி வரை ஆழ்ந்த தூக்கம் தேவை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Exit mobile version