சென்னையில் 16 தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 38 லட்சத்து 88 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் வெளியிட்டார். மொத்தம் 38 லட்சத்து 88 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள ஜனவரி 4, 5 மற்றும் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் பிரகாஷ் தெரிவித்தார்.

Exit mobile version