மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கூட்ட நெரிசல் உள்ள நேரங்களில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறையும், கூட்ட நெரிசல் இல்லா நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Exit mobile version