பெண் போக்குவரத்துக் காவலரை தாக்கிய திமுக வழக்கறிஞர்கள்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெண் போக்குவரத்துக் காவலரை, திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த இருவர் ஆபாசமாகப் பேசி தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னை பகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் கடந்த 7 நாட்களாக மழை நீரோடு கழிவு நீர் கலந்து தேக்கமடைந்துள்ளது. மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஸ்டான்ஸ் சாலை, பேரக்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து மாற்றுப் பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சதீஷ் மற்றும் விவேக் பாபு ஆகியோர் தடுப்புகளை அகற்றி விட்டு செல்ல முற்ப்பட்டுள்ளனர். பெண் போக்குவரத்து காவலர் உமா மகேஸ்வரியிடம் அறுவறுக்கதக்க வகையில் ஆபாசமாக பேசி, தான் திமுகவை சார்ந்தவன் என்று கூறி, பெண் என்றும் பாராமால் மிரட்டியும் தாக்கியும் உள்ளனர். இதனை அங்கு இருந்த பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நிலையில், காவலரின் புகாரின் பேரில் திமுக வழக்கறிஞர்கள் இருவர் மீது புளியந்தோப்பு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Exit mobile version