பண்டிகை முடிந்ததையடுத்து, சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் விலை சற்று குறைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி முடிந்ததை அடுத்து கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. பழங்களின் வரத்து அதிகரித்து விற்பனை மந்தமாக இருப்பதால் விலை குறைந்து காணப்படுவதாகவும் ஆயுத பூஜை நெருங்கும் நேரத்தில் விலை மீண்டும் உயரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ ஆப்பிள் 130 ரூபாய்க்கும், ஆரஞ்ச் 120 ரூபாய்க்கும், கருப்பு மற்றும் பன்னீர் திராட்சை 70 முதல் 80 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கும, முல்லை 300 ரூபாய்க்கும், ரோஜா 100 முதல் 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காய்கறிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 முதல் 28 ரூபாய்க்கும், உருளைகிழங்கு 24 முதல்16 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும்,
பீட்ரூட் 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.