சென்னை கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை எழும்பூர் இடையே உள்ள கூவம் ஆற்றில் இளம் பெண் ஒருவரின் உடல் கிடைப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், உடலை மீட்டனர். அந்தப் பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.