பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்

சென்னை ஐ.ஐ.டி. துவக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வைர விழாவும், 56வது பட்டமளிப்பு விழாவும், இன்று நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக, டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில், பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து சென்னை, ஐ.ஐ.டி. வளாகத்திற்கு செல்கிறார். பின்னர், ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா வளாகத்திற்கு சென்று, ‘இந்தியா- சிங்கப்பூர் ஹேக்கத்தான்’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், ஐ.ஐ.டி. வளாகத்தில் நடக்கும் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். விழா முடிந்ததும் ஐ.ஐ.டி.யில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

விழாவில், தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version