கல்விக் கட்டணம் தொடர்பான வழக்குகள் ஜூலை 17-ம் தேதி விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்!

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கல்விக் கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகிற 17-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின் படி, தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அனைத்து வழக்குகளையும் வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

Exit mobile version