ராபிடோ செயலி மீதான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த உதவும் ராபிடோ செயலி மீதான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது

இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாலும், அதற்கான போதிய விதிமுறைகள் வகுக்கப்படாததாலும் ராபிடோ (RAPIDO) செயலிக்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் அந்த செயலியை பிளே ஸ்டோரிலிருந்து நீக்குமாறும், இணையதளத்தை முடக்குமாறும் உத்தரவிடப்பட்டது. இந்த தடையை நீக்க கோரி ராபிடோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடைய நீக்க மறுத்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்ட பிறகே முடிவுக்கு வர முடியும் எனக் கோரிய நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version