ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நளினி, தானே நேரில் வாதாடினார். 6 மாதம் பரோல் வழங்க முடியாது என்றும் அதிகபட்சம் 1 மாதம் மட்டுமே பரோல் வழங்க முடியும் என்று தமிழக அரசு வாதிட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி உத்தரவிட்டது. பரோலில் இருக்கும் காலங்களில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.