கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் தோழமைக்கட்சிகள் போட்டியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உறுப்பினராக இல்லாத கட்சியின் சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சின்னம் ஒதுக்கீடு குறித்து தேர்தல் அதிகாரி தான் முடிவு செய்வார் எனவும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
மேலும் கூட்டணிக் கட்சிக்கு , அங்கீகரிக்கப்பட்ட கூட்டணி கட்சியின் சின்னம் ஒதுக்கப்படும் என முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.